×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்ச்சையான காட்சிகள்! ஜான்வி கபூரின் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு! விமானப்படை அனுப்பிய கடிதம்!

Air force send letter to janvi kapoor movie

Advertisement

சரண் சர்மா இயக்கத்தில், கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ்  இணைந்து தயாரித்த திரைப்படம் குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்.இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண்விமானி குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.அவர் கார்க்கில் போரின் போது ராணுவ வீரர்களை காப்பாற்ற விமானப்படை ஹெலிகாப்டர்களை இயக்கிய விமானியாவார். மேலும் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். 

மேலும் குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் திரைப்படத்தில் குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிப் போனது. இந்நிலையில் இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேற்று ரிலீசானது.

இந்த நிலையில் படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் எனவும் மத்திய திரைப்பட தணிக்கை குழு, தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஓ.டி.டி தளத்துக்கு இந்திய விமானபடை கடிதம் எழுதியுள்ளது. படத்தில்  சில காட்சிகளில் இந்திய விமானப்படையில் உள்ள பெண்கள் பற்றிய தவறான சாயல் உள்ளது. இந்திய விமானபடையில் ஆண், பெண் என பாலியல் பாகுபாடு இல்லாமல் சம அந்தஸ்து வழங்கபட்டுவருகிறது.

மேலும் இதுபோன்ற சர்ச்சை காட்சிகள் இருப்பின் அதை நீக்கும்படி பட நிறுவனத்துக்கு முன்னரே அறிவுறுத்தியும் அவர்கள்  அதை செய்யவில்லை. திரைப்படத்துக்கு முன்னால் ஒரு மறுப்பு மட்டும் போடப்பட்டுள்ளது. எனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையெனில் ராணுவ சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Janvi kapoor #Air force #letter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story