தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தளபதி#63: "பக்கா மாஸ்" படம்! இன்னும் சுவாரஸ்யங்களை வெளியிட்ட AGS

AGS about thalapathy 63

AGS about thalapathy 63 Advertisement

தளபதி விஜயின் 63 படத்தின் அறிவிப்பை AGS நிறுவனத்தின் தரப்பில் இருந்து அர்ச்சனா கல்பதி என்பவர் ட்வீட் செய்து உறுதி செய்திருந்தார்.

ஹாட்ரிக்:

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இது தளபதியுடன் அட்லீக்கு ஹாட்ரிக் படமாகும். 

Thalapathi 63

மெர்சல்,  சர்க்காரை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தளபதி 63 படத்திற்கும் இசையமைக்க உள்ளார். மேலும், பாடலாசிரியர் விவேக் தொடர்ந்து மூன்றாவது முறையாக தளபதி 63 படத்திற்கு பாடல்களை எழுத உள்ளார். 

அனல் அரசு ஸ்டண்ட் பணிகளை கவனிக்க ஜி.வி விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க உள்ளார்.

எடிட்டிங் பணிகளை எல்.ரூபன் கவனிக்க உள்ளார். ஆர்ட் டைரக்டராக முத்துராஜ் பணி பணியாற்ற இருப்பதாகவும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அடலி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் என்றும் நாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா நடிக்க உள்ளதாகவும், படம் சமீபத்தில் வெளியான ராட்சசன் படத்தைப் போன்று திரில்லர் படமாக இருக்கும் என்றும் தனியார் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. 

இந்த படத்தைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள AGS நிறுவனம், படம் பக்கா மாஸ் மற்றும் குடும்ப பாங்கான ரசிகர்களை கவரும் வண்ணமாகவும், விஜய் ரிகர்களின் எதிர்பார்ப்புகளையும் நிச்சயம் பூர்த்தி செய்யும் என தெரிவித்துள்ளது. 

மேலம் அடுத்தாண்டு ஜனவரியில் படபிடிப்புகள் தொடங்கும் என்றும் 2019 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் AGS நிறுவனம் அறிவித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thalapathi 63 #Thalapathy#63 #atlee #Ags #arrahman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story