மீண்டும் சிம்புவிற்கு வரும் பிரச்சனைகள்...! படம் வெளியாகுமா? ஆகாதா?
again-simbu-problem
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் சிம்பு தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுந்தர்.சி இயக்கம் படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஜார்ஜியாவில் தொடங்கியிருப்பதாக படக்குழு கூறுகின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீதுதயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். சிம்புவாள் தனக்கு ரூ.20 கோடி நஷ்டமானது என கூறியிருந்தார்.
மேலும் சிம்பு இந்த படத்திற்காக வெறும் 60 நாட்கள் மட்டுமே நடித்துக்கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மைக்கேல் மறுபடியும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதில் என்னுடைய பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமல் நடிகர் சிம்பு அவர்கள் எந்தவொரு படத்திலும் நடிக்கவே கூடாது என்றும் கூறியிருக்கிறார். தற்போது இயக்குனர் சுந்தர்.சி படத்தில் சிம்பு நடிக்க போவதாக கூறுகின்றனர். அனால் என் பணம் திரும்ப கிடைக்காமல் சிம்புவை நான் நடிக்க விட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
என்னுடைய நஷ்டத்தை சிம்பு சரிசெய்ய வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தை நம்பியுள்ளேன். அவர்கள் தான் பணத்தை பெற்று தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.