தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம ஜாக்பாட்தான்! கார்த்தியை தொடர்ந்து பிரபல ஹிட் நடிகருடன் இணையும் அதிதி ஷங்கர்.! எந்த படத்தில் பார்த்தீங்களா!!

செம ஜாக்பாட்தான்! கார்த்தியை தொடர்ந்து பிரபல ஹிட் நடிகருடன் இணையும் அதிதி ஷங்கர்.! எந்த படத்தில் பார்த்தீங்களா!!

Adidi shankar going to act with sivakarthickeyan in maaveran movie Advertisement

இந்திய திரையுலகில் பல பிரம்மாண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் இயக்குனர் ஷங்கர். அவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வேறு லெவலில் இருக்கும். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். அவர் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாக்கியுள்ள விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அதிதி ஷங்கர் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அதிதி ஷங்கர் நடிக்கவிருக்கும் மற்றொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது அதிதி மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள மாவீரன் படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் ஹீரோவாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் அதிதி ஷங்கருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivakarthickeyan #Adidi shankar #Maaveeran
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story