×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்ப்பிணியாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் என்ன காரியம் செய்கிறார் பாருங்கள்; வைரலாகும் புகைப்படங்கள்.!

actress yeamijacson - eurob tourist - vairal photos

Advertisement

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களாக தேர்வு செய்து நடித்தார். அதே போல் சம்பள விஷயத்திலும், அறிமுக நடிகைகளுக்கு வழங்கும் சம்பளம் போல், இல்லாமல் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் தொகை கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எமி நடித்திருந்தார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2 . ௦ திரைப்படத்திலும் நடிகை எமி ஜாக்சன் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் நீண்ட காலமாக எமி காதலித்து வந்த அவரது காதலருக்கு, எமிக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் திருமணம் நடைபெறாத நிலையில் எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் தனது புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன், பல்வேறு சமூகப் பணிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் ஐரோப்பா முழுவதும் ரோடு ட்ரிப் செய்து வருகிறார். இதற்காக ’காஷ் அன்டு ராக்கெட் இன்ஷியேட்டிவ்’ என்ற அமைப்புடன் அவர் கைக்கோர்த்துள்ளார். இந்த அமைப்பு, பிரபல துறைகளில் இயங்கும் பெண்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் பலவேறு சமூகப் பணிகளுக்கு நிதியை திரட்டும். இம்முறை இதற்காக நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட சில பிரபலமான பெண்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, 6 மாதம் கர்ப்பிணியான எமி ஜாக்சன் ஐரோப்பா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு பல பிரபலங்களை சந்தித்து அவர்களிடம் நிதி திரட்டி வருகிறார்.. தன்னுடைய இந்த பயணம் தொடர்பான புகைப்படங்கள், தகவல்களை அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டும் வருகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#emi jackson recent photos #emi jackson #tamil cinima
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story