தெய்வமகள் சத்யாவா இது? சுண்டி இழுக்கும் லேட்டஸ்ட் பேஷன் புகைப்படங்கள்!
Actress vani bhojan new stills

சமீப காலமாக சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படுபவர் சீரியல் நடிகை வாணி போஜன். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை வாணிபோஜன்.
தெய்வமகள் சத்யா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கா முடியாது அந்த அளவிற்கு இவரது கதா பாத்திரம் பேசப்பட்டது. சீரியலில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் வாணி போஜன்.
தெய்வமகள் தொடர் முடிவு பெற்றதை அடுத்து சன் டீவியில் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பங்கேற்றார். அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறுவர்கள் பங்கேற்கும் நகைச்சுவை தொடர் ஒன்றிற்கு நடுவராக பங்கேற்று வருகிறார் வாணி போஜன்.
விஜய் தொலைக்காட்சிக்கு வந்ததில் இருந்து இவரை அனைவரும் சின்னத்திரை நயன்தாரா என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை வாணி போஜன். இதோ அந்த புகைப்படங்கள்.