×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கீர்த்தி சுரேஷ் வேற லெவல்! சமந்தா மாஸ்! புகழந்து தள்ளும் த்ரிஷா!

Actress Thrisha says who impressed her most

Advertisement

பொதுவாக நடிகைகள் என்றாலே ஒருவருக்கு ஒருவர் போட்டி பொறாமையுடன்தான் இருப்பார்கள் என நாம் நினைப்பது உண்டு. ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷை புகழந்துள்ளார் நடிகை த்ரிஷா.

மேலும் நான் எந்த நடிகையைப் பார்த்தும் பொறாமைப்பட்டதில்லை என்று கூறியுள்ளார் த்ரிஷா. 96 படம் கொடுத்த வெற்றி திரிஷாவை உற்சாகமாக மாற்றி இருக்கிறது. மீண்டும் அஜித், விஜய், சூர்யா என்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

மேலும் தன்னை கவர்ந்த நடிகைகள் யார் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. இது பற்றி அவர் கூறியதாவது : எல்லாத் துறையிலும் போட்டி இருக்கும்; அதை எல்லாம் நான் பொருட்படுத்திக்கமாட்டேன்.
ஜோதிகா இப்போதும் ரொம்ப அழகான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அனுஷ்கா, நயன்தாரா என்று ஒவ்வொருத்தரிடமும் இருக்கிற நல்ல வி‌ஷயங்களை நான் ரசிக்கிறேன்.

ஆரோக்கியமான போட்டிதான், நாம செய்யற வேலையை சுவாரசியமாக மாற்றும். சமந்தா, கீர்த்தி சுரேஷ் இரண்டுபேருமே திறமைசாலிகள். சமந்தாவை 'விண்ணைத்தாண்டி வருவாயா' படப்பிடிப்பில்தான் முதல்முறையாக பார்த்தேன். அப்போவே அவங்க நடிப்பை ரசிச்சிருக்கேன். கீர்த்தியை ஒரே ஒருமுறைதான் சந்திச்சிருக்கேன். 'நடிகையர் திலகம்' படத்துல கலக்கிட்டாங்க. அற்புதமான நடிகை" என்று புகழ்ந்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thrisha #Keerthy suresh #96 movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story