×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடே.! நடிகை தமன்னாவா இது.? ஆளே அடையாளம் தெரியலையே.!? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

அடடே.! நடிகை தமன்னாவா இது.? ஆளே அடையாளம் தெரியலையே.!? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் திரை துறையில் காலடி எடுத்து வைத்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார் தமன்னா.

தமிழில் முதன் முதலில் கேடி திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமான தமன்னா, முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்கு பின்பு விஜய், அஜித், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

தற்போது தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்ட தமன்ன,  தெலுங்கு மற்றும் இந்தி மொழி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்து வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் காவாலா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இப்பாடல் மட்டுமே மிகப்பெரும் வெற்றி அடைந்து உலக அளவில் பிரபலமானது.

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும், பிஸியான நடிகையாக இருந்து வரும் தமன்னாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி படிக்கும்போது நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி தமன்னாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamanna #actress #Kollywood #Jailer #movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story