×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை சன்னி லியோனுக்கு இப்படி ஒரு சோதனையா? என்னனு நீங்களே பாருங்க!

Actress sunny leone name on begar state job post

Advertisement

இந்தியா மட்டும் இல்லது உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி படத்தில் அறிமுகமாகி நடித்துவருகிறார். மேலும், தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்துவருகிறார் சன்னி லியோன்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.

அந்த பட்டியலில் முதலிடம் பிடித்தவரின் பெயரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகினர். அதற்கு காரணம் நடிகை சன்னி லியோனின் பெயர் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தது. மேலும் அவரது தந்தை பெயர் லியோனா லியோன் என்றும் இருந்தது.

இந்த விவகாரம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் காதுக்கு செல்ல, இது இறுதி பட்டியல் அல்ல, அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றும். யாரோ விளையாட்டாக இதை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சம்மந்தப்பட்ட அதிகாரி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sunny Leone #Job posting #Name list
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story