×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ரீதிவ்யா! அட.. யார் தெரியுமா?? வெளிவந்த சூப்பர் தகவல்!!

மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ரீதிவ்யா! அட.. யார் தெரியுமா?? வெளிவந்த சூப்பர் தகவல்!!

Advertisement

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கி சட்டை, பென்சில், விஷாலுடன் மருது, விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகை ஸ்ரீதிவ்யா நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக டைகர் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் முத்தையா கதை வசனம் எழுத இயக்குனர் கார்த்தி இப்படத்தை இயக்க உள்ளாராம். மேலும் டைகர் படத்தின் பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sridivya #Vikram prabhu #tiger
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story