இறப்பதற்கு முன் கர்ப்பமாக இருந்த பிரபல தமிழ் நடிகை! பலவருடம் கழித்து வெளியான உண்மை.
Actress soundarya was pregnant before her death
90 களில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் சவுந்தர்யா. ரஜினி, விஜயகாந்த், கார்த்திக் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாது கன்னடா, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.
இயக்குனர் ஆர். வி உதயகுமாரின் இயக்கத்தில் வெளியான பொன்னுமணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினியுடன் இவர் நடித்த படையப்பா திரைப்படம் இவரை தென்னிந்திய அளவில் பிரபலமாகியது.
இந்நிலையில் பிரபல அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக எலிகாப்டரில் சென்றபோது எலிக்காப்டர் வெடித்து தனது 31 வயதில் மரணம் அடைந்தார். இந்நிலையில் சவுந்தர்யா இறந்த போது அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்ததாக இத்தனை வருடம் கழித்து தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர். வி உதயகுமார் சவுந்தர்யா இறப்பதற்கு முதல்நாள் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அண்ணா, நான் இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளேன் என அவர் கூறியதை கேட்டு தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், ஆனால், அடுத்த நாளே சவுந்தர்யா இறந்த செய்தி கேட்டு தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் ஆர்.வி உதயகுமார் கூறியுள்ளார்.