×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. நடிகை சோனியா அகர்வாலுக்கு விரைவில் 2-வது திருமணமா?.. ரசிகரின் பதிவால் எழுந்த சர்ச்சை..!! 

என்னது.. நடிகை சோனியா அகர்வாலுக்கு விரைவில் 2-வது திருமணமா?.. ரசிகரின் பதிவால் எழுந்த சர்ச்சை..!! 

Advertisement

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய "காதல் கொண்டேன்" படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதனை தொடர்ந்து இவர் மதுர, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 

தெலுங்கு, மலையாளம் போன்ற பலமொழி படங்களிலும் நடித்த சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்து கடந்த 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். 

இதற்குப் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2010-ல் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கியிருந்த சோனியா அகர்வால் மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். 

இந்த நிலையில் தற்போது தனது இரண்டு கைகளிலும் மெஹந்தி வைத்ததுள்ள புகைப்படங்களை சோனியா அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணம் நடக்கவுள்ளது என்று கமெண்ட்களை பதிவிட்டு பரபரப்பாகியுள்ளனர். 

சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மையா? என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த சோனியா அகர்வால் "என்னுடைய திருமணத்துக்கான மெஹந்தி இந்த அளவுக்கு எளிமையானதாக இருக்காது" என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress Sonia Agarwal #tamil cinema #Tamil actress
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story