கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற காதலர் தினம் நடிகை இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
கேன்சரால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் நார்மல் நிலைக்கு திரும்பியுள்ள நடிகை சோனாலி பிந்த்ராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் 1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற காதல் திரைப்படம் காதலர் தினம். இப்படத்தில் குணால் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இதில் ஹீரோயினாக நடிகை சோனாலி பிந்த்ரே நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். காதலர் தினம் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
நடிகை சோனாலி பிந்த்ரே இதற்கு முன் பம்பாய் திரைப்படத்தில் வெளிவந்த ஹம்மா ஹம்மா பாடலுக்கு நடனமாடி இருந்தார். பின் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்திலும் நடித்துள்ளார். பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ள அவர் தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகினார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் அதனால் பெரும் அவதிப்பட்ட அவர் அதற்காக தீவிர சிகிச்சையும் மேற்கொண்டு போராடினார். இந்நிலையில் அவர் தற்போது குணமடைந்து மீண்டும் நார்மலான நிலைக்கு திரும்பியுள்ளார். இதற்கிடையில் அவர் புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரீ-ரிலீசாகி கொண்டாடப்படும் தளபதியின் சச்சின்.! 2 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா??
இதையும் படிங்க: அட.. இந்த விஷயம் தெரியுமா?? கில்லி படத்தில் நடிகர் விமல் பாடியிருக்காரா!! அதுவும் எந்த பாடலில் தெரியுமா??