என் வாழ்க்கையை பல ஆண்கள் சீரழித்துவிட்டனர்..? பிரபல நடிகையின் உருக்கமான பேட்டி …!
Actress sona sad life story

தமிழ்த் திரையுலகில் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கோலோச்சியதில் நடிகை சோனாவும் ஒருவர். பூவெல்லாம் உன் வாசம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்து தமிழகத்தில் பேமஸ் ஆனார்.
புதுமுக நடிகைகளின் வரவு, குடிப்பழக்கம் போன்ற காரணங்களால் சினிமா வாய்ப்பை இழந்து தவித்த இவர் ஒரு பேட்டியில் நான் படவாய்ப்பு கேட்டு போனால் உடலுறவுக்குத்தான் அழைக்கிறார்களே தவிர படவாய்ப்பு தருவதில்லை என்று சொல்லி வேதனைப்பட்டார்.
மேலும், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று குடிப்பதை நிறுத்திவிட்டதாகவும், இனி நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன் எனவும் கூறியுள்ளார் நடிகை சோனா.