நடிகை சிம்ரன் மரணத்தில் திடீர் திருப்பம்!. போலீசார் அதிரடி நடவடிக்கை!.
actress simran death case
ஒடிசா மாநிலத்தின் நடிகையான சிம்ரன் சிங்கின் Sambalpuri albums என்ற ஆல்பத்தில் மிகவும் பிரபலமானார். குறிப்பாக, இவரது யூடியூப் வீடியோக்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ரசிகர்கள் அவரை செல்ஃபி பெபோ என்று அழைப்பார்கள். சம்பல்புரி மொழி ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர் சிம்ரன்.
இந்நிலையில், இவரது உடல் மகாநதி பாலத்துக்கு அடியில் இறந்த நிலையில் கிடந்த நிலையில், இது கொலையா? தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர்தான் சிம்ரனை கொலை செய்துவிட்டார்கள் என சிம்ரனின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரிலும் இவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இன்று போஸ்கோ சட்டத்தின் கீழ் சிம்ரானின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிம்ரனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் உயிரிழந்திருப்பது தெரியந்துள்ளது.