×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ராவண அழகி.! இந்த வயசிலயும் செம மாடர்னாக, ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் நடிகை சீதா.!

ராவண அழகி.! இந்த வயசிலயும் செம மாடர்னாக, ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் நடிகை சீதா.!சீதா

Advertisement

90ஸ் காலக்கட்டங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் தமிழ் சினிமாவில் ஆண் பாவம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபனுடன் “புதிய பாதை” என்ற படத்தில் இணைந்து  நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் பிறந்தனர்.  பின் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தொடர்ந்து நடிகை சீதா தனது 43 வயதில் தொலைக்காட்சி நடிகர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார்.

சீதா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் மாடி தோட்டம், சமையல் குறிப்பு என பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது “ராவண அழகி” என்ற போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் பேண்ட் போட்டு, மார்டனாக புடவை அணிந்து அதன் மேல் கோர்ட் போட்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Seetha #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story