×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா! கணவரையே மிஞ்சிடுவார் போல! சாயிஷா வெளியிட்ட புகைப்படத்தால் ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

Actress sayeesha learn boxing practice

Advertisement

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி  சாயிஷா யுவரத்னா என்ற படத்தில் நடிப்பதன் மூலம் கன்னட சினிமாவிலும் அடியெடுத்து வைக்கிறார்.

நடிகை சாயிஷாவுக்கு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் ஆர்யாவுடன் காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், நடனமாடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில் தற்போது சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து பாக்சிங் பயிற்சி மேற்கொள்ள  தொடங்கியுள்ளார். அதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  நடிகர் ஆர்யா  உடற்பயிற்சிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் நாள்தோறும் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்கிறார்.
மேலும் தற்போது பாக்சிங் கற்றுகொண்டுள்ளார். ஆர்யா அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில்  குத்துச்சண்டைப் போடும் கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arya #Sayesha #boxing
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story