×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"பெண்களுக்கு சினிமாவில் மதிப்பே இல்லை, நயன்தாரா தான் இதுக்கெல்லாம் காரணம்" பிரபல நடிகையின் சர்ச்சையான பேட்டி..

பெண்களுக்கு சினிமாவில் மதிப்பே இல்லை, நயன்தாரா தான் இதுக்கெல்லாம் காரணம் பிரபல நடிகையின் சர்ச்சையான பேட்டி..

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்து இருக்கிறார்.

நடிகை நயன்தாரா 'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் நயன்தாரா தற்போது ஹீரோயினை மையப்படுத்தி மட்டுமே திரைக்கதைகளை கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

இது போன்ற நிலையில், அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சரண்யா, நயன்தாராவை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "தமிழ் சினிமாவில் பெண்களை வளரவே விட மாட்டாங்க. கதாநாயகர்களுக்கு இருக்கும் மதிப்பு பெண் நடிகைகளுக்கு இல்லை.

இந்த விஷயத்தை மாற்றியது நயன்தாரா தான். நயன்தாரா மாதிரி ஒரு நடிகையை பார்த்து நான் வியந்து வருகிறேன். பெண்களை மையப்படுத்தியும் திரைக்கதைகளை எடுக்க வேண்டும் என்று யோசிக்க வைத்தது நயன்தாரா மட்டும்தான் என்று நயன்தாராவை குறித்து பெருமையாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #Famous #glamour #Kollywood #actress
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story