ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை சங்கவி! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
Actress sangavi latest photo goes viral
தல அஜித் நடிப்பில் வெளியான அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சங்கவி. முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிரபலமானார் நடிகை சங்கவி. தளபதி விஜய்யின் ஆரம்ப கால படங்கள் அனைத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என சுமார் 95 படங்களுக்கு மேல் நடித்துள்ள சங்கவி வயதான காரணத்தால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதன்பின்னர் ஒருசில டிவி தொடர்களில் நடித்த இவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
சமீபகாலமாக இவர் எப்படி இருக்கிறார், புகைப்படம் என எதுவும் வெளிவராத நிலையில் சமீபத்தில் நடிகை மீனாவை சந்தித்தபோது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் சங்கவி. இதோ அந்த புகைப்படம்.