×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாட சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா! இத்தனை கோடியா...

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாட சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா! இத்தனை கோடியா...

Advertisement

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் செம்மர கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதை தொடர்பாக உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் புஷ்பா. இந்த படம் 2 பாகமாக வெளியிடப்படவுள்ளது. மேலும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையைத்து இருக்கிறார். 

இப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் ரூ.250 கோடி செலவில் எடுக்கப்பட்டு, முதல் நாளில் ரூ.70 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.

புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற அப்படத்தில் அமைந்துள்ள பாடல்களும் ஒரு முக்கிய காரணம். அப்படத்தில் இடம் பெற்றுள்ள ஊ  சொல்றியா மாமா  பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் சென்சேஷனல் ஹிட்டானது. அந்த ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாட ரூ 1.5 கோடி சம்பளம் வாங்கியதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது சமந்தா உண்மையில் ரூ. 5 கோடியை சம்பளமாக கேட்டு வாங்கியதாக தற்போது கூறப்படுகிறது.  மேலும் நடிகை சமந்தா முதலில் அப்பாடலுக்கு நடனமாட தயங்கியதாகவும் நடிகர் அல்லு அர்ஜுன் தான் அவரை சமாதானம் செய்து ஆட வைத்ததாக கூறப்படுகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Samtha #dance #video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story