தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தவர் விஜயகாந்த் - உருக்கமான வீடியோவை வெளியிட்ட நடிகை சாக்ஷி.!

பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தவர் விஜயகாந்த் - உருக்கமான வீடியோவை வெளியிட்ட நடிகை சாக்ஷி.!

actress-sakshi-agarwal-about-vijayakanth-passes-away Advertisement

 

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது 71 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு தமிழகத்தையே சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், திரையுலகினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தி இருக்கிறது. 

மறைந்த கேப்டன் விஜயகாந்த் சினிமா துறைக்கு செய்த தொண்டுகள் ஏராளம். அவரால் பல குடும்பத்தில் அன்று முதல் இன்று வரை விளக்கு எரிந்தது. இதனால் திரைஉலகினருக்கு கேப்டனின் மறைவு என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Latest news

இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள வீடியோவில், "கேப்டன் விஜயகாந்த் சாரின் மரணத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இது தமிழ் திரையுலகிற்கு மிகவும் பெரிய இழப்பு. நாங்கள் அனைவரும் அவர் நீண்ட காலம் வாழுவர் என நினைத்தோம். 

தமிழ் திரையுலகில் பணியாற்றும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் கேப்டன் சார் செய்துள்ள உதவிகளை பலரும் கூறுவார்கள். அவரின் மரணத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. பெண்கள் பாதுகாப்பில் தொடங்கி, உணவு, அனைவர்க்கும் சரிசமமான மரியாதை என பல சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். இது தமிழக மக்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் பேரிழப்பு" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #cinema news #Actress shakshi Agarwal #நடிகை சாஷி #விஜயகாந்த் #vijaykanth
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story