×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதுக்கு வெட்கப்படனும்.. என்ன செய்வதென தெரியலை.! கதறி அழுதவாறு நடிகை சதா வெளியிட்ட வீடியோ!! என்ன காரணம்??

டெல்லியில் 10 லட்சம் நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இதுகுறித்து கதறி அழுதவாறு நடிகை சதா வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

டெல்லியில் தெருநாய் கடித்து 6 வயது சிறுமி உயிரிழந்தது. ஆனால் குழந்தையின் மரணத்திற்கு ரேபிஸ் நோய் காரணமில்லை என மருத்துவ சான்றிதழ்கள் தெரிவித்தன. இந்த நிலையில் டெல்லியில் உள்ள 10 லட்சம் தெருநாய்களை பிடித்து, அவற்றிற்கு கருத்தடை ஊசி போட்டு, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல நடிகை அழுதவாறே வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், "6 வயது குழந்தை உயிரிழந்ததற்கு ரேபிஸ் காரணம் இல்லை என நிரூபணம் ஆனபிறகும் கூட நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசால் 10 லட்சம் நாய்களை கவனித்து அடைக்கலம் கொடுக்க முடியாது. அதனை கொல்ல போகிறார்கள்.

உரிய நேரத்தில் தெருநாய்களுக்கு 
கருத்தடை ஊசி போட்டு,  எண்ணிக்கையை கட்டுப்படுத்தாதது மாநில அரசின், நகராட்சியின் தோல்வி. அப்படி இருக்கும்போது நாய்களை தண்டிப்பது எப்படி சரியானதாக இருக்கும். இந்த நாய்களைக் காப்பாற்ற நான் உட்பட பலரும் சொந்தப் பணத்தை செலவு செய்து முயற்சி செய்து வருகிறோம். ஆனால், அது போதுமானதாக இல்லை. வீட்டில் அழகான நாய்க்குட்டி வேண்டும் என எங்கிருந்தோ நாய்களை விலைக்கு வாங்கிவந்து வளர்க்கிறார்கள். அவர்களாலதான் பல நாய்கள் இன்று தெருவில் உள்ளது. உயிரையும் விட போகிறது. நீங்களெல்லாம் நாய் மீதோ, விலங்குகள் மீதோ  பிரியம் கொண்டவர்கள் என சொல்லவே தகுதி இல்லாதவர்கள்.

இதையும் படிங்க: "திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எப்படி தடுக்க முடியும். இதற்காக என்ன செய்வது என தெரியவில்லை. தெரிய நாய்களை முறையாக பராமரிக்க தவறிய இந்த நாடு வெட்கப்பட வேண்டும் என அழுது கொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களையும், அவருக்கு ஆறுதலையும் கூறி வருகின்றனர். 


இதையும் படிங்க: பிறந்தவுடன் நடந்த கொடூரம்.! 9 நாய்குட்டிகளை உயிரோடு எரித்த சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actress sadha #street dog #Court order
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story