×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஆண்களும் மேகியும் ஒன்று., இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும்" - நடிகை ரெஜினா ஓபன்டாக்..! அதிர்ந்துபோன ரசிகர்கள்..!!

ஆண்களும் மேகியும் ஒன்று., இரண்டும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும் - நடிகை ரெஜினா ஓபன்டாக்..! அதிர்ந்துபோன ரசிகர்கள்..!!

Advertisement

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரெஜினா. இவர் அதன்பின் தமிழில் ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். 

தமிழில் ரஜினியுடன் தர்பார், கமல்ஹாசனின் பாபநாசம், விஜயுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா இருவரும் இணைந்து நடித்துள்ள அதிரடி காமெடி தெலுங்கு படம் நாளை ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நடிகை ரெஜினா பேட்டியளித்தபோது ஆபாச ஜோக் ஒன்றை கூறி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கினார். அந்த ஜோக் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. அந்த பேட்டியில் சாப்பிட்டபடி பேசிய ரெஜினா, நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு, "ஆண்களும் மேகியும் ஒரு மாதிரியானவர்கள். ஏனென்றால் இரண்டும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும்" என்று கூறினார். 

ஆனால் தொகுப்பாளருக்கு அதை புரிந்து கொள்ள சிறிது நேரமாகிய நிலையில், அருகிலிருந்த நிவேதா தாமஸ் இந்த ஜோக் புரியாதது போலவே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்த அடல்ட் ஜோக் வீடியோ தீயாக பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress regina #actress regina cassandra #regina speech #viral video #adult joke
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story