×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. ரகசிய திருமணம் செய்துகொண்டாரா இந்த சாந்தனு பட நடிகை! பரவி வரும் தகவல்!!

என்னது.. ரகசிய திருமணம் செய்துகொண்டாரா இந்த சாந்தனு பட நடிகை! பரவி வரும் தகவல்!!

Advertisement

தமிழ் சினிமாவில் சாந்தனு நடிப்பில் வெளிவந்த கண்டேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

மேலும் அவர் தற்போது சிரஞ்சீவி நடிக்கும் போலா சங்கர் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு  நடனமாட உள்ளார். அதுமட்டுமின்றி நடிகை ராஷ்மி கவுதம் தெலுங்கில் டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை ராஷ்மி கவுதம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் இந்த தகவல் உண்மைதானா? என்பதைக் குறித்து ராஷ்மி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வரும் அவர் திருமணம் குறித்து ஏன் மறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rashmika gautham #marriage #Secret
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story