×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீர் உடல் நலக்குறைவு! விஜய் பட பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

திருப்பாச்சி பட புகழ் நடிகர் பெஞ்சமின் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவான வெற்றிக்கொடிகட்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மேடை நாடகக் கலைஞரான நடிகர்
பெஞ்சமின். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திருப்பாச்சி திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

இவர் தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வந்த நடிகர் பெஞ்சமின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் பெஞ்சமின் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Penjamin #Thiruppachi #hospital
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story