×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரவில் நடுரோட்டில் பிரபல கவர்ச்சி நடிகையின் தம்பி செய்த அட்டூழியம்! அதிரடியாக கைது செய்த போலீசார்!

actress papiona brother arrest

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாபிலோனா. இவர் தை பொறந்தாச்சு, உன்னை கொடு என்னை தருவேன், என் புருஷன் குழந்தை மாதிரி,  அசத்தல்,  வட்டாரம் போன்ற பல திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.

இவரது தம்பி விக்னேஷ் குமார் என்ற விக்கி. இவர் சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் பழனி மற்றும் காவலர் சங்கர் இருவரும் ரோந்து வாகனத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலிக்கிராமம் தசரதபுரம் தெருவில் தலைக்கேறிய குடிபோதையில் ரோட்டில் நின்று விக்கி கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளார்நின்று விக்கி.

 இந்நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. மேலும் அவர் கடுமையான குடிபோதையில் இருந்ததால் அவரை போலீசார்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த விக்கி காவலர் சங்கர் என்பவரை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

 இந்நிலையில் போலீசார்கள் காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து விக்கியை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#papilona #liquor #arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story