லலித்குமார் அதற்கு அடிமை! அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை! நிலானி கண்ணீர் பேட்டி!
Actress nilani says about lalithkumar character
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை நிலானி. சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி போராட்டம் பற்றி போலீஸ் உடையில் போலீசுக்கு எதிராக கருத்துக்கூறியதால் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் துணை இயக்குனர் ஒருவர் தன்னை திருமணம்செய்துகொள்ள வற்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி.
இதனையடுத்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்த போலீசார் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
அவர் போலீசாரிடம் கூறுகையில் நான் லலித்குமாரிடம் நண்பராக தான் பழகினேன். அவர் தான் என்னுடைய நட்பினை தவறாக புரிந்து கொண்டார் என நிலானி கூறியதை பொறுத்துக்கொள்ள முடியாத லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு காந்தி லலித்குமார் நிலானியுடன் எடுத்துக்கொண்ட படுக்கையறை காட்சிகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிலானி சமூக வலைதள பக்கங்களில் காந்தி லலித் குமார் தற்கொலைக்கு நான் காரணம் என்பது போல அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர் பல பெண்களை ஏமாற்றியிருந்தார்.
காந்தி லலித்குமார் தன்னையும் தன் குழந்தைகளையும் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் நடிகை நிலானி கண்ணீருடன் பேட்டி அளித்தார்.