×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்பா, அண்ணாவை பார்த்து பயம்.. ஒரு லவ் லெட்டர் வந்ததில்லை - மனம் திறந்த ராம் சரணின் சகோதரி.!

அப்பா, அண்ணாவை பார்த்து பயம்.. ஒரு லவ் லெட்டர் வந்ததில்லை - மனம் திறந்த ராம் சரணின் சகோதரி.!

Advertisement

தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை நிஹாரிகா. இவர் தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக இருந்து வரும் ராம் சரணின் சகோதரி ஆவார். நிஹாரிகா திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாது, பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவரின் தந்தையான நாகேந்திர பாபுவும் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கடந்த 2016 ஆம் வருடம் "ஒக்க மனசு" என்ற தெலுங்கு படத்தில் நடித்த நிஹாரிகா, மொத்தமாக 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் ":ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்" என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை நிஹாரிகா, "தனக்கு கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் லவ் ப்ரபோசல், லவ் லெட்டர் என்று யாரும் வந்து கொடுத்தது இல்லை. அப்பா, அண்ணா உயரமாக இருப்பார்கள். அதனால் நான் ஏதும் அவர்களிடம் சொல்லிவிடுவேன் என பலருக்கும் பயம்" என்று தெரிவித்தார். 

நடிகை நிஹாரிகாவுக்கு கடந்த 2020 ஆம் வருடம் சைதன்யா ஜெ.வி என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress Niharika #Niharika Konidela #Ram charan #cinema #Love Proposal #College Days
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story