×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் சேதுபதி பட நடிகை கைது! அட.. இவங்க பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் குடும்பத்தை சேர்ந்தவராச்சே!!

விஜய் சேதுபதி பட நடிகை கைது! அட.. இவங்க பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் குடும்பத்தை சேர்ந்தவராச்சே!!

Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில், வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். இந்தப் படத்தில் ஹீரோக்களாக விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். இதில் ஹீரோயினாக நிஹாரிகா நடித்தார்.

இவர் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவியின் மூத்த தம்பி நாக பாபுவின் மகள் ஆவார். ஆரம்பத்தில் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக துவங்கிய அவர் வெப் தொடரின் மூலம் நடிகையானார். இந்நிலையில் அவர் நேற்று ஹைதராபாத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் போலீசார் அந்த ஹோட்டலில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்பொழுது அங்கு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதால் போலீசார்கள் அங்கிருந்த அனைவரையும் கைது செய்துள்ளனர். அப்பொழுது நடிகை நிஹாரிகாவும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Niharika #arrest #drugs party
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story