×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னடா இது சோதனை! நமிதா இப்படி ஆயிட்டாங்க! வைரலாகும் புகைப்படம்!

Actress namitha current photo goes viral

Advertisement

தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல்படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. ஏய் படத்தை தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் நமீதா.

அதன்பின்னர் பல தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாக மாறினார். அதன்பின்னர் இவரை படங்களில் பார்ப்பது குறைந்துவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

ஹைஜீனிக் என்ற வார்த்தை மூலம் பிக் பாசில் பிரபலமானார். பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை நமீதா திருமணமும் செய்துகொண்டார். எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது உடல் எடை மட்டும் குறையவே இல்லை. தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நமீதாவின் புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது. அதில் வித்தியாசமான கெட்டப்பில், மிகவும் குண்டாக காட்சியளிக்கிறார் நமீதா.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namitha #bigg boss tamil
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story