சூப்பர் டீலக்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்! யார் தெரியுமா?
Actress nadhiya was the first choice for super deluxe movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றுள்ளது. திருநங்கையாக விஜய் சேதுபதி நடிப்பில் அசத்தியுள்ளார். விஜய் சேதுபதியுடன் சமந்தா, பாசில், ரம்யா கிருஷ்ணன் போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
பாகுபலி படத்தில் ராஜமாதவாக நடித்த ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் பாலியல் தொழில் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது பிரபல தமிழ் நடிகை நதியாதானம். தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நதியா ஜெயம் ரவிக்குக்கு அம்மாவாக எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி படத்தில் நடித்திருந்தார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவரைவைத்து இயக்குனர் ஒருசில காட்சிகளை படமாக்கியுள்ளார். ஆனால், ஒருசில இடங்களில் இவரது நடிப்பு சரிவராததால் நதியாவை தூக்கிட்டு படக்குழு ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்துள்ளது.