×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல சன் டிவி சீரியலில் களமிறங்கும் பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?

Actress nadhiya joining with sun tv roja serial

Advertisement

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானது சன் தொலைக்காட்சி. தமிழ்நாடு மட்டும் இல்லது இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது சன் தொலைக்காட்சி. மேலும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் தொலைக்காட்சி தொடங்கி அங்கும் பிரபலமாகிவருகிறது சன் நிறுவனம். சன் தொலைக்காட்சியின் இந்த பெரும் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.

இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என பலரும் சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக அணைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் நாளுக்கு நாள் புது புது விதத்தில் மக்களை கவர்ந்துவருகிறது.

அந்த வகையில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா என்ற சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ப்ரைம் டைமான இரவு 9 மணிக்கு மாற்றியுள்ளது சன் டிவி. 

மேலும் வரும் மார்ச் 18 முதல் ரோஜா தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும் 80 , 90 இல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை நதியா இந்த தொடரில் புதிதாக சேர்ந்துள்ளார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sun tv #Nadhiya #Roja serial
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story