×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி.. நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்! திரையுலகினர் கண்ணீருடன் இரங்கல்!!

நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!!

Advertisement

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக அவதாரமெடுத்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை மீனா. அவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பல  பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். பெங்களூருவைச் சேர்ந்த இவருக்கும், மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவரும் மீனாவை போலவே விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, மீனா, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் அதன் பக்கவிளைவாக வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவர் அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#meena #Husband #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story