×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை மஞ்சிமா மோகனா இது? பள்ளி பருவத்தில் எப்படி இருந்துருக்காங்கனு பாருங்க! புகைப்படம்!

Actress manjima mohan school age photo

Advertisement

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் கடந்தவருடம் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா என்னற்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். கேரளாவில் பிறந்த இவர், தனது 5 வயதில் ‘கலியூஞ்சல்’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தளங்கில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சுமா மோகன் சமீபத்தில் தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழியுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை மஞ்சுமா மோகன். அந்த புகைப்படத்தில் பள்ளி சீருடையில் மிகவும் அழகாக இருக்கிறார் மஞ்சுமா. இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#manjima mohan #manjima mohan school age photos #Tamil Actresses photo galleries
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story