×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" நடிகையின் வைரல் வீடியோ!

இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகையின் வைரல் வீடியோ!

Advertisement

கேரளா காசர்கோட்டைச் சேர்ந்தவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் 2012ம் ஆண்டு "சாட்டை" திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ராகவா லாரன்சுடன் இவர் நடித்துள்ள "சந்திரமுகி 2" பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் "ரத்தம்" படமும் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மஹிமா, தனது கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இவர் நடித்து வெளியாகவுள்ள "ரத்தம்" படத்தின் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர், மஹிமாவை ஆட வைத்துவிட்டு, பிறகு 'பேக் அப்' கூறியுள்ளார்.

அதன் பிறகு இயக்குனர் இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது என்று கூறியுள்ளார். அதற்கு மஹிமா "என்னுடைய நேரத்தை வீணடித்ததற்காக நீங்கள் இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று திட்டிய வீடியோ இப்போது வைரலாக வருகிறது. இது இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'ரத்தம்' திரைப்படத்தின் பிரமோஷன் என்று கூறப்பட்டு வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mahima #actress #Kollywood #News #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story