தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடல் எடையை குறைத்த குஷ்புவிடம் ரசிகர் கேட்ட ஏடாகூட கேள்வி!! அதற்கு குஷ்பு கொடுத்த பதிலை பாருங்க..

நடிகை குஷ்புவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த நபர் ஒருவருக்கு குஷ்பு பதிலளித்தவிதம் இண

Actress Kushbu funny reply to fans Advertisement

நடிகை குஷ்புவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த நபர் ஒருவருக்கு குஷ்பு பதிலளித்தவிதம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சினிமா, சீரியல், அரசியல் என முழுநேரமும் பிசியாக இருந்துவரும் நடிகை குஷ்பு தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்துவருகிறார். மேலும் புது தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். கலர்ஸ் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்க உள்ளார்.

kushbu

இப்படி தொடர்ந்து பிசியாக இருக்கும் குஷ்பு, இதனிடையே தனது உடல் எடையை குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். தனது உடல் எடையை குறைத்து, மாடர்ன் உடையில் குஷ்பு சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், "நான் உங்களை திருமணம் செய்துகொள்ளலாமா மேடம்" என குஷ்புவிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த குஷ்பு, "ஓ, மன்னிக்கவும். நீங்கள் , 21 ஆண்டுகள் தாமதமாகிவிட்டீர்கள். ஆனால் நான் எப்படியும் என் கணவரிடம் ஏதாவது கேட்கிறேன்“ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிலை பார்த்த மற்றொரு ரசிகர், "உங்கள் கணவர் ஏதாவது பதிலளித்தாரா மேடம்" என கேட்க, "துரதிர்ஷ்டவசமாக நான் அவருடைய ஒரே மனைவி. அதனால் மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டார். அவர் விட்டுக்கொடுக்க தயராக இல்லை“ என்று குஷ்பூ பதிவிட்டுள்ளார். இந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kushbu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story