நடிகை குஷ்புவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? சுவாரசிய தகவல் இதோ!
Actress kushboo real name

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த இவர் பிரபல இயக்குனர் சுந்தர். சி அவர்களை திருமணம் செய்துகொண்டார்.
சினிமாவை தவிர அரசியலிலும் ஈடுபாடு கொண்ட இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். தற்போது சினிமாவைவிட்டு ஒதுங்கி இருக்கும் நடிகை குஷ்பூ சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்ட இவரது உண்மையான பெயர் குஷ்பூ இல்லை. சினிமாவிற்காக தனது பெயரை குஷ்பூ என மாற்றிக்கொண்டார் நடிகை குஷ்பு. இவரது உண்மையான பெயர் நகத் கான்(Nakhat Khan).