×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நாலு கழுத வயசாகியும் தாலின்னா என்னன்னு தெரியாது" - குஷ்பூவின் பதிவை விமர்சித்த ஷர்மிளா..!

சின்னத்தம்பி குஷ்பூவை விமர்சித்த ஷர்மிளா.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!

Advertisement

கோலிவுட் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பி.வாசு இயக்கிய சின்னத்தம்பி திரைப்படம் அவரின் வாழ்க்கையின் மைல்கல் என்று கூறலாம். இந்த திரைப்படம் 9 திரையரங்கில் 356 நாட்கள் ஓடி சாதனை படைத்தன. நடிகை குஷ்பூ, நடிகர் பிரபு உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். 

இந்த படம் வெளியாகி 32 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், நடிகை குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் "சின்னத்தம்பி திரைப்படத்தின் போஸ்டரை பதிவிட்டு, தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது. இதனை என்னால் நம்ப முடியவில்லை. என் மீது காட்டிய அன்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். 

எனது இதயம் வாசு, பிரபு ஆகியோருக்காக துடிக்கும். இளையராஜாவின் இசை ஆன்மாவை கிளர்ந்து எழ செய்தது. அதனை மறக்கவும் முடியாது" என்று கூறியுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா குஷ்புவின் பதிவை விமர்சித்திருக்கிறார். அந்த பதிவில் "நாலு கழுத வயசாகியும் தாலின்னா என்னன்னு தெரியாதுன்னு சொல்லி தமிழ்நாட்டை தன் வசமாக்கிய மாபெரும் காவியம்" என்று கூறியுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actress kushboo #Tami Cinema #cinema news #Chinna Thambi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story