×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கன்டெய்னர் லாரியில் மோதி விபத்துக்குள்ளான நடிகை குஷ்புவின் கார்! வெளியான அதிர்ச்சி தகவல்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்த நடிகை குஷ்புவின் கார் கண்டெய்னர் லாரி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்த நடிகை குஷ்புவின் கார் கண்டெய்னர் லாரி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு சென்னையிலிருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கார் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் கார் மற்றும் பின்பக்க கதவு பெருமளவில் சேதம் அடைந்துள்ளது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக நடிகை குஷ்புவும், வேறு எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kushboo #accident #car
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story