×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சசிகுமாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்...!! பட டைட்டில் என்னனு தெரியுமா?

actress-keerthy-suresh-next-movie-actor-sasikumar

Advertisement

நடிகர் சசிகுமருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்...!! பட டைட்டில் என்னனு தெரியுமா? 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். இவர் தற்போது விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்யுடன் சர்கார் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கு அடுத்து அடுத்து படம் புக்கிங் குவிகிறது என்றும் கூறலாம். 

இதனை அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார்

தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 

மேலும் பிக் பாஸ் ஆரவ், சூரி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.விரைவில் இதன் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் நடைபெற இருக்கிறது.
இதனை அடுத்து கீர்த்தி சுரேஷுக்கு இந்த படமும் வெற்றி படமாக அமையுமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது... 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story