தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்! ஜகா வாங்கிய நடிகை கஸ்த்தூரி!

Actress kasthuri talks about issue with actor karthi

actress-kasthuri-talks-about-issue-with-actor-karthi Advertisement

 ஜூலை காற்றில் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கஸ்த்தூரி, நடிகர் கார்த்தி மற்றும் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் கார்த்தியுடன் கஸ்த்தூரி செல்பி எடுத்த விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தியின் அப்பா சிவகுமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்களின் செல்போனை தட்டிவிட்டது தமிழகம் முழுவதும் வைரலானது. பலர் சிவகுமாருக்கு ஆதரவாகவும், பலர் சிவா குமாருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

Kashthoori

இந்நிலையில்  ஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கார்த்தியிடம் நடிகை கஸ்தூரி செல்பி எடுத்தார். இதனால் கோவமடைந்த நடிகர் கார்த்தி மேடையில் இந்த பழக்கம் பற்றி கோபமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் இது பற்றி கஸ்தூரி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

"ஜூலை காற்றில்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது. Work out ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற emotional guys கண்டிப்பா July Kaatril படத்தை என்ஜாய் பண்ணுவீங்க. Its Show Biz Guys !" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kashthoori #Karthi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story