டும் டும் டும் நடிகை மறைத்து வைத்திருந்த நீண்டநாள் ஆசை! இறந்தபின் மகளுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்!
actress kalpana daughter act in malaiyala movie
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஏராளமான திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கல்பனா. நடிகை கல்பனா நடிகை ஊர்வசி மற்றும் கலாரஞ்சனியின் சகோதரி ஆவார்.
கல்பனா பாக்யராஜ் இயக்கத்தில் நடித்த சின்ன வீடு என்ற படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானத. அதனை தொடர்ந்து அவர் திருமதி ஒரு வெகுமதி, சிந்துநதி பூ, சதிலீலாவதி, லூட்டி, டும் டும் டும் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை கல்பனாவின் கணவர் அனில் குமார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஸ்ரீமயி என்ற மகள் உள்ளார். அவர் தனது தாயிடம் வாழ்ந்து வந்தார். நடிகை கல்பனாவிற்கு தனது மகளை பெரிய நடிகையாகி பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் அவரது மகளுக்கு கூச்ச தன்மை அதிகம் உள்ளநிலையில் அவர் அதனை கூறாமல் மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் 2016 ஆம் ஆண்டு படப்பிடிப்பில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீமயி தனது சித்தி ஊர்வசியுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் தனது தாயின் ஆசை தெரியவந்த நிலையில், விஸ்காம் மாணவியான ஸ்ரீ மயிக்கு மெஹரூப் முத்து இயக்கும் கிஸ்ஸா என்ற மலையாள படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீ மயிக்கு கல்பனா, ஊர்வசி மற்றும் கலா ரஞ்சனியின் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.