துளியும் மேக்கப் இல்லாமல் விமான நிலையம் வந்த காஜல் அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்.!
Actress kajal agarwal without makeup at Hyderabad airport

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் இவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். பொதுவாக நடிகர், நடிகைகள் என்றாலே மேக்கப் இல்லாமல் இருக்க மாட்டார்கள். வீட்டில் இருக்கும்போதும் சரி, வெளியே செல்லும்போதும் சரி என்னேரமும் மேக்கப் அணிந்து பார்ப்பதற்கு அழகாக தோன்றுவார்கள்.
இந்நிலையில், பிரபல நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சாமீப்பித்தல் விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக உள்ளார் காஜல் அகர்வால். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.