×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நயன்தாரா மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை விட எங்களுக்கு சம்பளம் குறைவாதான் தருவாங்க" கண் கலங்கிய விஜய் படநடிகை..

நயன்தாரா மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை விட எங்களுக்கு சம்பளம் குறைவாதான் தருவாங்க கண் கலங்கிய விஜய் படநடிகை..

Advertisement

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அறிமுக நடிகையாக வலம் வருபவர் ஜானகி தேவி. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் நடித்த திரைப்படங்களான ரம்மி, காவலன், சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது. வெள்ளி திரையில் நடிப்பதற்கு முன்பு சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் ஜானகி தேவி.

இது போன்ற நிலையில், பிரபல யூட்யூப் சேனலிற்கு இவர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில் ஜானகி தேவி பேசிய விஷயங்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவர் கூறியதாவது, "தமிழ் சினிமாவில் எங்களை போன்ற சைடு ஆர்ட்டிஸ்டிகளுக்கு எல்லாம் மரியாதையே கிடையாது. நயன்தாராவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சம்பளத்தை விட எங்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாக தான் கிடைக்கும். வெள்ளி திரையை விட சீரியலில் தான் சம்பளம் அதிகமாக இருக்கும் என்பதால் வெள்ளித்திரை நடிகைகள் தற்போது சின்ன திரையில் நடித்து வருகிறார்கள்" என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kollywood #actress #interview #Viral #controversy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story