×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காட்டு பங்களாவில் நடந்த திடீர் ரெய்டு! அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை! ஏன்? அப்படி அங்கு என்னதான் நடந்தது?

தமிழ் சினிமாவில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் ம

Advertisement

தமிழ் சினிமாவில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஹீனா பாஞ்சல். அதனை போலவே அவர் கன்னடத்தில் லொட்டு, தெலுங்கில் மல்லிப்பூ போன்ற படங்களிலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் அவர் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்துள்ளார்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி என்ற மலை அருகேயுள்ள சொகுசு பங்களாவில் சட்டத்திற்கு விரோதமாக ரகசியமாக போதை விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இதில் அனுமதியின்றி பார்ட்டி நடைபெற்றது தெரியவந்தது. மேலும் அங்கு போதைப் பொருள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அதில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பெண்கள் 6 பேர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டு பிரபல நடிகை ஹீனா பாஞ்சலும் கைது செய்யப்பட்டுள்ளார். இது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹீனா பாஞ்சல் மராட்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#drugs party #heroine #arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story