×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தன்னை கேலி செய்தவரின் மூக்கை உடைத்த பிரபல நடிகை!. உற்சாகத்துடன் வாழ்த்திய ரசிகர்கள்.!

actress give nosecut answer to who tease her

Advertisement

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற படத்தில் ஹிப்ஹாப் தமிழன் ஆதியுடன் இணைந்து நடித்து நடிகை ஆத்மிகா.இவர் தன்னை கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

 நேற்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து கூறப்பட்டு வந்தது.

 இந்நிலையில் நெட்டிசன்கள் சிலர் சினிமாவில் ஆண் நடிகர்கள், பெண்கள் வேடமிட்டு நடித்திருப்பதை மீம்ஸாக உருவாக்கி இருந்தனர். மேலும் அவற்றுடன் ஆத்மிகாவின்  புகைப்படத்தையும் இணைத்து இருந்தனர். அத்துடன்  மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

 இந்த மீம் இணையத்தில் வைரலாகவே அதனை தயாரித்தவருக்கு ஆத்மிகா கடுமையான பதிலடி கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

அதில் உன்னை சிறுவயதில் இருந்தே இத்தகைய அசிங்கமான சிந்தனையோடு வளர்த்ததை எண்ணி நான் வருத்தப்படுகிறேன். கடவுள் என்னை படைத்த விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அனைவரும் ஒரு விதத்தில் அழகுதான். உனக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என பதிலடி கொடுத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் சரியான பதில் என கொண்டாடி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#admika #women day #teasing
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story