×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல நடிகை திடீர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் சித்ரா. இவர்

Advertisement

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் சித்ரா. இவர் கே.பாலச்சந்தர் நடிப்பில் வெளிவந்த அவள் அப்படித்தான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

 அதனைத் தொடர்ந்து அவர் சேரன் பாண்டியன், ஊர்க்காவலன் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்த அவர் ஒரு நல்லெண்ணய் விளம்பரத்தில் நடித்தபிறகு நல்லெண்ணய் சித்ராவாக அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா இன்று அதிகாலை மாரடைப்பால் திடீர் மரணமடைந்துள்ளார். மேலும் இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. அவரது மரணம் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chitra #dead #heart attack
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story