×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட்டப்பகலில் பப்ளிக்கா சிகரெட் பிடிக்கும் தமிழ் நடிகை! வீடியோ வெளியிட்டு அதற்கு அவரே கூறிய விளக்கம்.

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தில் நடித்த நாயகி தான் தம் அடிக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதற்கு விளக்கமும் கொடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisement

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தில் நடித்த நாயகி தான் தம் அடிக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதற்கு விளக்கமும் கொடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் ஹீரோவாக நடித்த கொலைகாரன் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் நடிகை அஷிமா நர்வால்.

தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், இதற்கு முன்னதாக தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் பிரபலமாக உள்ளார். ஹரியானா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயதில்லையே மாடலிங், தற்போது சினிமா என கலக்கிவருகிறார்.

இந்நிலையில் இவர் சிகரெட் பிடிக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு, அதனுடன் சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார். ஹைதராபாத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு குறித்தும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், "புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பார்கள் ஹைதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானது தான். வெள்ளம் ஹைதராபாத்தை சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன.

நாம் பூமித்தாயை நிறைய காயப்படுத்திவிட்டோம் இப்போது பூமித்தாய் அதற்கெதிரான பலனை தருகிறாள். பூமியை காயப்படுத்தாதீர்கள் அப்படி செய்தால் நம்மை பன்மடங்கு பூமித்தாய் திருப்பித் தாக்குவாள். இது உலகின் மறுக்க முடியாத நியதி.

( பின்குறிப்பு - ஒரு படத்தின் கதாப்பாத்திரத்திற்காக போலியாக புகைபிடிக்க கற்றுக்கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அதிர்ச்சியையும், எதிர்வினைகளையும் தந்தது. ஆனால் பூமியை புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும் , எத்தனை காயப்படுத்துகிறோம் அது ஏன் நம்மில் யாருக்கும் அதிர்ச்சியை தருவதில்லை. உண்மையில் அது தான் நம் அனைவருக்கும் அதிர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்து பாதுகாப்போம்)

அன்புடன்

ஆஷிமா" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ashima narwal #Kolaikaran movie #actress video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story