விஷாலின் காதலியுடன் நடிகர் தனுஷ்!
Actress anu immanuvel acting with dhanush

நடிகர், பாடகர், தயாரிப்பாளர், கவிஞர், தற்போது இயக்குனர் என பல அவதாரங்களின் பிரதிபலிப்புதான் நடிகர் தனுஷ். பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரத்தை எடுத்தார் நடிகர் தனுஷ். சென்டிமென்டாக அந்தப் படத்தை ராஜ்கிரணை வைத்து இயக்கினார். அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது தான் இயக்கும் இரண்டாவது படத்தையும் சமீபத்தில் தொடங்கினார் தனுஷ். ஃபேன்டஸி பொழுதுப் போக்கு படமான இதில், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஶ்ரீகாந்த், அதிதிராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தக் குழுவில் இன்னொருவரும் இணைந்துள்ளார். இதில் தெலுங்கு நடிகை அனு இம்மானுவேலும் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இவர் கடந்தாண்டு மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாவது குறிப்பிடத் தக்கது .