மகளுடன் பொதுவெளியில் தோன்றிய ரன்பீர் கபூர் - ஆலியா பட்; நட்சத்திர ஜோடிக்கு குவியும் பாராட்டுக்கள்.!
மகளுடன் பொதுவெளியில் தோன்றிய ரன்பீர் கபூர் - ஆலியா பட்; நட்சத்திர ஜோடிக்கு குவியும் பாராட்டுக்கள்.!

இந்திய மற்றும் பிரிட்டிஷ் திரைப்பட நடிகையாக வலம் வரும் ஆலியா பட், ஹிந்தி திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவரும், இந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம்வந்த ரன்பீர் கபூரும் காதலித்து வந்தனர்.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தம்பதிகள் திருமணமும் செய்து கொண்டனர். பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மனதை பரிமாறிக் கொண்ட இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்தனர்.
இவர்களுக்கு ராஹா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் தங்களின் மகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனியார் நட்சத்திர விடுதிக்கு உணவு சாப்பிட வந்தனர். அப்போது இருவரும் தங்களது மகளை ஊடகத்தின் முன்பு அறிமுகம் செய்தனர். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் வரவேற்பு பெற்று, வசூலை வாரிக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.